--- --:--:-- --

முதல்வர் பழனிச்சாமி, ஸ்டாலின், பிரபலங்கள் வாக்களித்தனர்… சைக்கிளில் வந்து சர்ப்ரைஸ் தந்த விஜய் -படங்களுடன்

111

முதல்வர் பழனிச்சாமி சொந்த ஊரான சிலுவம்பாளையத்திலும், திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையிலும் வாக்களித்தனர். இதேபோல் பல பிரபலங்களும் உற்சாகத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

தமிழக சட்டசபையின் 234 தொகுதிகளிலும் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள் ரஜினி, கமல், அஜித், விஜய், சூரியா, கார்த்தி என பலரும் காலையிலேயே வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றுள்ளனர்.

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குபட்ட சிலுவம்பாளையத்தில் தனது குடும்பத்தாருடன் நடந்தே சென்று வாக்களித்தார். சென்னையில், திமுக தலைவர் ஸ்டாலின், தனது மனைவி துர்கா, மகன் உதயநிதியுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாக்கு செலுத்தினார்.

தேனி மாவட்டம்  பெரியகுளத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் வாக்களித்தார். அவருடன் அவரது மகன் தேனி எம்.பி. ரவீந்திரநாத்தும் தனது வாக்கை பதிவு செய்தார்.

தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுகுனாபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதி, அக்சராவுடன் வந்து சென்னை உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

சென்னை விருகம்பாக்கத்தில் தமிழிசை சவுந்திரராஜன் வாக்களித்தார்.

சென்னை தி.நகரில் உள்ள வாக்குசாவடியில் தந்தை சிவக்குமாருடன் நடிகர்கள் சூர்யா, கார்த்தி வந்து வாக்களித்தனர்.

வாக்களிப்பதற்காகச் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார். வாக்களித்துவிட்டு ஸ்கூட்டரில் சென்றார்.

விஜய் சைக்கிளில் வந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவ தொடங்கியதுடன் ஏராளமான மீம்ஸ் வெளியாக தொடங்கியது.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டாடாபாத் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு இன்று காலை வந்த வானதி சீனிவாசன், அங்கு பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் நடிகை குஷ்பூ தனது வாக்கினை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பூ, ‘ என் தொகுதியில் 4 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி உள்ளன. ஆனால் விரைவில் பழுது சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.

திமுக எப்போதும் விதிமுறைகளைப் பின்பற்றுவது இல்லை. நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதற்காக விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்திருக்கலாம்.

Leave a Reply

Right Menu Icon