தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தி குறிப்பில் ஏழாம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி வீசியதால் பெரும்பாலான மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பைவிட சுமார் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் அனல் காற்று வீசக் கூடும் என்பதால் 12 மணியிலிருந்து 4 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடைய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த ஆறு மணி நேரத்திற்குள் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்பதால் வடக்கு அந்தமான், மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.






