--- --:--:-- --

திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலு பணியிடை நீக்கம்..!

7

அமைச்சர் கே சி வீரமணி மீது வழக்கு பதிவு செய்ய காலதாமதம் செய்ததால் திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

 

அமைச்சர் கே சி வீரமணி போட்டியிடும் ஜோலார்பேட்டை தொகுதியில் கடந்த 26ஆம் தேதி தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஒரு காரில் அதிமுக பரிசுப்பொருட்கள் பிடிபட்டன. இதை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னரும் அமைச்சர் கே சி வீரமணி மற்றும் 5 பேர் மீது வழக்குப்பதிய 24 மணி நேரம் தாமதிக்கப்பட்டது.

 

இது குறித்து தேர்தல் மேற்பார்வையாளர் விஜய் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon