--- --:--:-- --

மதுரை, குமரியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரசாரம்

Modi CBE 02

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நாளை மறுநாள் நிறைவடையும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரை மற்றும் கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

 

வரும் 6, தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நாளை மறுநாள் மாலை நிறைவடைகிறது. இதையொட்டி தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று தமிழகத்தில் இரண்டு இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான நேற்றிரவே மதுரைக்கு வந்துவிட்ட பிரதமர் மோடி, உலகப்புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்றிரவு தரிசனம் செய்தார்.

 

இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 11 மணியளவில், மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு அம்மா திடலில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

 

இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் வாக்கு சேகரிக்கிறார். முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இருவரும் பிரசாரம் செய்கின்றனர்.

 

மதுரையில் தேர்தல் பிரசார கூட்டத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் கேரள மாநிலம் பத்தனம்திட்டை செல்லும் பிரதமர் மோடி, அங்கு பிரசாரம் செய்கிறார். பின்னர் அவர் கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பகல் 2.30 மணி அளவில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் பிரசாரம் செய்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon