--- --:--:-- --

சுங்கச்சாவடி ஊழியர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி..!

7

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதி ஊழியர் உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மாரியப்பன் என்ற ஊழியர் சுங்கச்சாவடியில் கண்ணாடியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

 

அப்போது நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பை உடைத்துக் கொண்டு வந்ததோடு பணியில் ஈடுபட்டிருந்த மாரியப்பன் மீது மோதியது.

 

பின்னரும் லாரி நிற்காமல் சுங்கச் சாவடியை கடந்து சென்றது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் ஊழியர்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை சென்று லாரியை மடக்கி ஓட்டுநரை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon