தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 608 ரூபாய் உயர்வு..!
சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 608 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 76 ரூபாய் விலை உயர்ந்து 4 ஆயிரத்து 238 ரூபாய்க்கும், ஒரு சவரன் 608 ரூபாய் விலை அதிகரித்து 33 ஆயிரத்து 904 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி கிராம் 1 ரூபாய் உயர்ந்து 68 ரூபாய் 70 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.






