--- --:--:-- --

இன்று ஒரே மேடையில் மு.க ஸ்டாலின், ராகுல் காந்தி பிரச்சாரம்..!

2

தேர்தல் பரப்புரை முடிவடைய ஒரு வாரம் இருக்கும் நிலையில் தமிழகத்தில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. சேலத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்று பேசுகின்றனர்.

 

தாராபுரத்தில் நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொள்கிறார். தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமையுடன் பரப்புரை ஓய்கிறது. முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆகியோர் தீவிர பரப்புரை ஈடுபட்டிருக்கும் நிலையில் தேசிய தலைவர்களும் தமிழகம் வருகின்றனர்.

 

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று சேலம் சீலநாயக்கன்பட்டி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முக ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு ஒரு லட்சம் பேர் அமரும் அளவுக்கு மைதானத்தில் நாற்காலிகள் போடப்பட்டு உள்ளன.

 

இந்த கூட்டத்தில் வைகோ, முத்தரசன், கே பாலகிருஷ்ணன் , திருமாவளவன், காதர்மொய்தீன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். நாளை மறுநாள் தாராபுரத்தில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

 

இதற்காக உடுமலைப்பேட்டை சார்பில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் பரப்புரை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார். தாராபுரத்தில் அதிமுககூட்டணியில் பாஜக சார்பில் அந்தக் கட்சியின் மாநில தலைவர் வேல்முருகன் போட்டியிடுகிறார்.

Leave a Reply

Right Menu Icon