நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி 2 வயது மகனுக்கு பரிசளித்துள்ள நபர்..!
குஜராத் மாநிலத்தை சேர்ந்த நபரொருவர் நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியம் படும்படி செய்துள்ளது. மறைந்த பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் விண்வெளி வாழ்க்கையில் மிகுந்த ஆர்வமுடையவர்.
அதன் காரணமாக அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி இருந்தார். அதேபோல நடிகர் ஷாரூக் கான் மீது அதீத அன்பு வைத்திருந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ரசிகர்கள் இருப்பர். அவரது 52வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பெயரில் நிலவில் சிறு இடம் ஒன்றை வாங்கி அவருக்கு பரிசு அளித்தனர்.
பூமியில் நிலம் வாங்குவதே குதிரை கொம்பாக உள்ள நிலையில் தொழில் அதிபர்கள் சிலரும் நிலவில் நிலம் வாங்கத் தொடங்கியுள்ளனர். குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் இவர். கட்டிய தொழிலதிபரான இவர் 2 வயதான தனது மகனுக்கு சிறந்த பரிசு ஒன்றை அளிக்க ஆசைப்பட்டார்.
அதன்படி நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்க முடிவு செய்தார். அவர்அ ந்த முயற்சியில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் அமைந்துள்ள இன்டர்நேஷனல் ரிஜிஸ்டர் எனப்படும் சர்வதேசத்திடம் அனுமதி கோரி இமெயில் ஒன்றை நிலம் வாங்கி 2 வயது மகனுக்கு அதனை பரிசளித்துள்ளார்.






