அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்புப்பிரிவு… அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில், அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று, அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் அருகே ஒரு ஏக்கர் நிலத்தின் விற்பனை தொகையை மாற்றியதை எதிர்த்து ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதால் அரசின் கொள்கை, நலத்திட்டம் மக்களை சென்றடைகிறதா என சந்தேகம் உள்ளது என கேள்வி எழுப்பியது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு ஊழியர்களின் சொத்து, திறமை, நேர்மையை ஆய்வு செய்ய அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அனைத்து பத்தரப்பதிவு அலுவலகங்களிலும் ஊழல் தடுப்பு பிரிவை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி சுப்ரமணியம், ஊழல் தடுப்பு பிரிவு அளிக்கும் அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதிகாரிகளின் அலட்சியத்தால் அடித்தட்டு மக்களுக்கு எந்த நலத்திட்டங்களும் சென்றடையவில்லை. ஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அந்த அலுவலகத்தின் பணி, ஒவ்வொரு சேவைக்கும் எத்தனை நாள்கள் ஆகும் என்பது பற்றிய அறிவிப்புப் பலகை வைத்திருக்க வேண்டும். ஒவ்வோர் அரசு அலுவலகத்திலும் லஞ்சம் தொடர்பான புகார் எண், முகவரி இடம் பெற வேண்டும் என்று உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.






