--- --:--:-- --

ஸ்கூட்டர் ஓட்டி அமைச்சர் ஸ்மிருதி ராணி! வானதிக்காக வாக்கு சேகரிப்பு…

smirthi

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, இன்று இருசக்கர வாகனத்தில் சென்று வாக்குகளை சேகரித்தார்.

 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. தேர்தல் நெருங்கிவிட்டதால் வாக்கு சேகரிக்கும் பணிகளில் வேட்பாளர்கள் தீவிரமாக உள்ளனர். கோவை தெற்கு பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார்; அவரை எதிர்த்து, நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் சார்பிலும், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர்.

 

இந்த நிலையில், வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி இன்று கோவைக்கு வந்து வாக்கு சேகரித்தார். கோவை ராஜவீதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மகளிர் பேரணி இன்று நடைபெற்றது. இந்த மகளிர் பேரணியில் ஏராளமான பெண்கள் இருசக்கர வாகனத்திலும் , நடைபயணமாகவும் பங்கேற்றனர்.

 

தெப்பகுளம் மைதானம் வரை நடைபெற்ற இப்பேரணியில், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பங்கேற்றார். சிறிது தூரம் பிரச்சார வாகனத்தில் வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, பின்னர் இரு சக்கர வாகனத்தில் பயணித்தபடி வாக்கு சேகரித்தார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வேட்பாளர் வானதி சீனிவாசனும் பயணித்தார். தெப்பக்குளம் மைதானத்தில் மகளிர் பேரணி நிறைவடைந்தது.

பின் கூட்டத்தினர் மத்தியில் வேட்பாளர் வானதி சீனிவாசன் பேசியதாவது: மக்கள் சேவை மையம் மூலம் பல்வேறு உதவிகள் பாஜக செய்து வருகிறது.பாஜகவில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் வேலை பார்த்தால் அகில இந்திய தலைவர் பதவி கூட கிடைக்கும் என்பதற்கு நானே ஒரு உதாரணம்.

 

நெசவாளர்கள், ஐவுளித்துறை என சார்ந்த கோரிக்கைகள் குறித்து எந்த உதவி கேட்டாலும் உடனடியாக செய்பவர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி. ஐவுளித்தொழிலை உலக அளவில் கொண்டு செல்ல, எப்போதும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி உதவுவார் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon