கொரொனா இரண்டாவது அலையின் தாக்கம் வரும் மே மாதம் வரை இருக்கும்..!
கொரொனா இரண்டாவது அலை தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் அதன் தாக்கம் வரும் மே மாதம் வரை இருக்கும் என பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வு பிரிவு கணித்துள்ளது.
தற்போது தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது பாதியில் இது புதிய உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக சௌமியன் காந்தி கோட்ஸ் தலைமையிலான பாரத ஸ்டேட் வங்கி நிபுணர்குழு கணித்துள்ளது.
ஏப்ரல் இரண்டாவது பாதிப்புக்கு பிறகு தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இறுதியில் நிலைமை கட்டுக்குள் வரும் என
நிபுணர் குழு கூறியுள்ளது. பொதுமக்களை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை என்றும் தடுப்பூசி மூலம் மட்டுமே தொற்றைக் குறைக்க முடியும் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.






