--- --:--:-- --

தனியார் மருத்துவக் கல்லூரியில் 53 மாணவர்களுக்கு தொற்று உறுதி..!

1

காஞ்சிபுரத்தை அடுத்தபொன்னேரி கரை பகுதியில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் 53 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

 

இந்த கல்லூரியில் பயின்று வந்த ஆயிரத்து 518 மாணவர்களில் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரொனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு மாணவர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

அதனையடுத்து அவர்களுடன் இருந்த மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் இதுவரை 53 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Right Menu Icon