--- --:--:-- --

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது..!

4

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 22 வயது இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட காஞ்சி ஊராட்சிக்குட்பட்ட கோம்பைக்காடு பகுதியில் வசித்து வருபவன் முருகன் .

 

22 வயதாகும் இவர் அந்தப் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவது குறித்து அந்தச் சிறுமி தங்கள் குடும்பத்தினருடன் தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் சைல்டு லைன் அமைப்பினரின் உதவியை நாடினர். அந்த அமைப்பினர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த முருகன் மீது கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

புகாரின் அடிப்படையில் மகளிர் காவல் துறையினர் இளைஞன் முருகனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு அளித்து அவன் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

 

இதனையடுத்து மகளிர் காவல் துறையினர் முருகனை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோம்பைக்காடு பகுதியில் வசித்து வரும் மக்களிடையே பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon