--- --:--:-- --

தமிழக தேர்தல் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கை..!

1

கோவில்களுக்கு தனி வாரியம், சென்னை மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்படும் என பல்வேறு திட்டங்களை பாஜக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது. தமிழக தேர்தல் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

 

அதில் புதிதாக 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தொழில் செய்ய உகந்ததாக தென்மாநிலங்களில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்து வழிபாட்டு தலங்களை நிர்வாகிகள் இந்து ஆன்றோர் சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனி வாரியம் அமைத்து ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக டேப்லட் கணினி வழங்கப்படும் எனவும் பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

மேலும் விவசாயத்திக்கு தனி பட்ஜெட். சென்னை மாநகராட்சிக்கு மூன்று மாநகராட்சியாக பிரிக்கப்படும். சட்டமேலவை மீண்டும் கொண்டு வரப்படும் எனவும் பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon