--- --:--:-- --

கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடரலாமா? விடுமுறையா? – இன்று ஆலோசனை

7

கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடரலாமா என்பது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரி அதிகாரிகளுடன் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று முதல் ஒன்பது மற்றும் 10,11 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுத இருக்கும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் உயர் கல்வித்துறை முதன்மை செயலர் இன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

 

அப்போது கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடரலாமா? செமஸ்டர் தேர்வுகளை எப்படி நடத்துவது, கல்லூரிகளில் வகுப்புகளை தொடர்வது என்றால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது எப்படி என்பது உட்பட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

அதன் அடிப்படையில் அடுத்தகட்ட அறிவிப்பை அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon