மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று நகரங்களில் பொது முடக்கம்..!
கொரொனா பரவலைத் தடுக்க மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று நகரங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அந்த மாநிலத்தில் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்தூர், போபால் மற்றும் ஜபல்பூர் ஆகிய மூன்று நகரங்களில் இரண்டு நாட்களுக்கு பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 10 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை பொதுமக்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.
மேலும் மகாராஷ்டிராவுக்கு செல்லும் பேருந்து சேவையை நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாளொன்றுக்கு 5 லட்சம் பேருக்கு கொரொனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.






