--- --:--:-- --

சாலை விபத்தில் காயமடைந்தவர்களை திமுக வேட்பாளர் சொந்த காரில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்..!

6

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்தவர்களை அந்த தொகுதி திமுக வேட்பாளர் ராஜேஷ் தனது சொந்த காரில் ஏற்றிச் சென்றுள்ளார். அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

 

கொங்கணாபுரம் சேர்ந்த நான்கு பேர் ஒரே பைக்கில் சென்றபோது லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி தூக்கி வீசப்பட்டனர். இதில் 2 பேர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டனர்.

 

அப்போது அந்த வழியாக வந்த சங்ககிரி திமுக வேட்பாளர் ராஜேஷ் அடிபட்டவர்கள் இரண்டு பேரை சொந்த காரில் ஏற்றி வந்து சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

Leave a Reply

Right Menu Icon