--- --:--:-- --

சாத்தான்குளம் கொலை வழக்கை 6 மாதத்தில் விசாரிக்க உத்தரவு…!

2

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கை 6 மாதத்தில் விசாரிப்பதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மனைவி செல்வராணி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்து அதற்குள் முடிக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் அவ்வப்போது கோவில்பட்டிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தற்போது இறுதிக்கட்ட விசாரணை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஆறு மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon