உணவகம் ஒன்றில் பணியாற்றும் கல்லூரி மாணவிக்கு இரண்டு லட்சம் ரூபாய் டிப்ஸ்..!
அமெரிக்காவில் புளோரிடா மாகாண உணவகம் ஒன்றில் பணியாற்றும் கல்லூரி மாணவிக்கு ஒரே நாளில் இரண்டு லட்சம் ரூபாய் அன்பளிப்பு வழங்கப்பட்டதால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் உள்ளார். கிம்பர்லி பிள்ளியான் என்ற கல்லூரி மாணவி உணவகம் ஒன்றில் பகுதி நேர ஊழியராக 6 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார்.
அவர் தன்னுடைய படிப்பு தொடர்பாக உணவு விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் உதவி புரியுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்று இரண்டு வாடிக்கையாளர்கள் ஆயிரத்து 300 டாலர் மற்றும் 1500 டாலரை மாணவிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
அவர்களின் உதவிக்கு மாணவி தனது முகநூல் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.






