யாருடைய பங்களிப்பையும் மறுப்பதன் மூலம் நாடு முன்னேற முடியாது..!
யாருடைய பங்களிப்பையும் மறுப்பதன் மூலம் நாடு முன்னேற முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 75வது சுதந்திரதினத்தை கொண்டாடுவது தொடர்பாக அமைத்துள்ள குழு உடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசியுள்ளார்.
அப்போது அனைவரின் பங்களிப்புகளையும் ஏற்றுக்கொண்டு மரியாதை செலுத்துவதன் மூலமே நாடு முன்னேற்றம் காண முடிகிறது என குறிப்பிட்டார். இந்த மந்திரத்தை தாங்கள் பின்பற்ற விரும்புவதாகவும் மோடி கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை கூட செய்ய முடியாத பல விஷயங்களை இந்தியா தற்போது செய்து வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
65 ஆண்டுகால பயணத்தில் நான் படிப்படியாக இந்த நிலைக்கு வந்துள்ளதாக பிரதமர் கூறினார். இந்த பயணத்தில் நாட்டின் பல்வேறு பகுதி மக்களின் பங்களிப்பு உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.







