--- --:--:-- --

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வர உள்ளார்..!

7

த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வர உள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 10 மணியளவில் நாகர்கோவில் வரும் அமைச்சகத்தில் உள்ள அமித்ஷா சுசீந்திரத்தில் உள்ள சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.

 

தொடர்ந்து காலை 11.15 மணி அளவில் ஒரு மணி நேரத்திற்கு வெற்றிக் கொடியை ஏந்தி வெல்வோம் என்ற பெயரில் இந்து கல்லூரியில் தொடங்கி வேப்பமூடு சந்திப்பு வரை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

 

பின்னர் தனியார் ஹோட்டலில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் மீண்டும் பிற்பகல் 2 மணியளவில் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்ல இருப்பதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon