--- --:--:-- --

சென்னை, கோவையில் உள்ள லலிதா ஜூவல்லரியில் வருமானவரித்துறை சோதனை!

Lalitha

சென்னை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடைகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

 

தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ள நகைக்கடையான  லலிதா ஜூவல்லரி மற்றும் அதற்கு  சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை நடைபெறுகிறது. லலிதா ஜூவல்லரியின் தலைமையிடமான சென்னை, மதுரை, கோவை என 25 இடங்களில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது.

 

 

 

வரி ஏய்ப்பு புகார் வந்ததை அடுத்து  ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இச்சோதனையில் பல ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வுக்குட்படுத்தி வருகின்றனர். சோதனையின் முடிவில்தான் வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என்ற விவரம் தெரியவரும்.

Leave a Reply

Right Menu Icon