பெண் எஸ்பி கொடுத்த பாலியல் புகாரின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது..!
டிஜிபி நிலையிலுள்ள அதிகாரி மீது பெண் எஸ்பி கொடுத்த புகாரின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. விழுப்புரம் சிபிசிஐடி பதிவு செய்த அந்த முதல் தகவல் அறிக்கையில் முதலமைச்சரின் பரப்புரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது காவல்துறை உயர் அதிகாரி தன்னிடம் நடந்து கொண்ட முறை குறித்து பெண் எஸ்பி கூறிய தகவல்கள் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிப்ரவரி 22ஆம் தேதி சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் உள்துறை செயலாளரிடம் புகார் அளிக்க கிளம்பியபோது எஸ்பிக்கள் மூவர் தன்னை தடுத்து நிறுத்த முயன்றதாக பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதை மீறி சென்னையை நோக்கி வந்தபோது பரனூர் சுங்கச்சாவடி அருகே எஸ்பி தலைமையில் 15 காவலர்கள் தடுத்து நிறுத்தி வற்புறுத்தி தம்மை தொடர்புடைய அதிகாரியிடம் பேச வைத்தது முதல் தகவல் அறிக்கையின் மூலமாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே தொடர்புடைய அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கும் நிலையில் அதில் தொடர்புடைய மற்ற காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.






