--- --:--:-- --

சென்னையில் 17 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி..!

6

சென்னை தாம்பரம் அருகே மாநகராட்சி பூங்காவில் விளையாடி கொண்டிருந்த 17 வயது சிறுவன் மின் கம்பத்தில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

பேரூராட்சியில் உள்ள அந்த பூங்காவில் அதே பகுதியை சேர்ந்த கௌதம் என்ற சிறுவன் சக சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். பூங்காவில் உள்ள மின் விளக்கு கம்பம் ஒன்றில் குதித்த போது மின்சாரம் தாக்கி கவுதம் உயிரிழந்துள்ளார்.

 

அந்த கம்பத்தில் மின் வயர்கள் சேதமடைந்து வெளியே தொங்கும் நிலையில் மின் சாதனங்களை முறையாக பராமரிக்காததே காரணம் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கேட்டபோது மாநகராட்சி அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon