கமல்ஹாசன் தலைமையில் ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் நேர்காணல்..!
மக்கள் நீதி மையம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் தொடங்கியது. அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் முதற்கட்டமாக 36 பேருக்கு நேர்காணல் நடைபெற்றது.
விருப்ப மனு தாக்கல் செய்தவர்களில் நிர்வாகக்குழு செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் உள்ளிட்டவற்றை முதற்கட்ட நேர்காணலில் பங்கேற்றனர்.
நேர்காணல் முடிவுகள், மதிப்பெண்கள் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மதிப்பெண்கள் எதுவும் விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு நேரடியாக தெரியப்படுத்தப்பட மாட்டாது எனவும் அந்த கட்சியினர் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.






