--- --:--:-- --

பேய் விரட்டுவதாக கூறி சாட்டையால் அடித்ததில் பெண் உயிரிழப்பு..!

18

பேய் விரட்டுவதாக கூறி பெண் பூசாரி சாட்டையால் தாக்கியதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பள்ளி கிராமத்தை சேர்ந்த தாரணி தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வந்தார்.

 

தாயின் நினைவிடத்திற்கு சென்று வந்தவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பேய் பிடித்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அச்சம் அடைந்த பெண் பூசாரியிடம் பேயை விரட்டுவதற்காக அழைத்து சென்றுள்ளார்.

 

அங்கு அவர் சாட்டையால் தாக்கியதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தாரணி வீட்டில் உயிரிழந்துள்ளார். அவருக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்திருக்கும் நிலையில் சிகிச்சை அளிக்காமல் பேய் விரட்ட அழைத்துச் சென்றதே உயிரிழப்புக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon