--- --:--:-- --

இரு மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை..!

12

ரு மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் சேர்ந்த மாரிமுத்து தனது பத்து மற்றும் பன்னிரண்டு வயதான இரண்டு மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கீழக்கரை போலீசார் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தனர்.

 

இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சுபத்திரா குற்றவாளி மாரிமுத்துவுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் எட்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon