--- --:--:-- --

அமைதிப் படையில் உள்ள வீரர்களுக்கு 2 லட்சம் கொரோனா தடுப்பு ஊசிகளை இந்திய அளித்துள்ளது..!

11

நா அமைதிப் படையில் உள்ள வீரர்களுக்கு 2 லட்சம் கொரோனா தடுப்பு ஊசிகளை இந்திய அளித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார்.

 

தங்கள் படையினருக்கு தடுப்பூசி தர முன்வந்ததற்காக இந்தியாவிற்கு ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

 

உலகின் பல்வேறு நாடுகளில் சுமார் 94 ஆயிரம் அமைதிகாக்கும் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். 121 நாட்டு வீரர்கள் இந்த படையில் இடம் பெற்றிருக்கும் நிலையில் இதில் அதிகம் இருப்பது இந்திய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon