--- --:--:-- --

அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் காரணமாக ராகுல் காந்தி இன்று புதுச்சேரி வருகிறார்..!

3

புதுச்சேரி அரசியலில் அடுக்கடுக்கான குழப்பங்கள் நிலவும் சூழலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று அம்மாநிலத்தில் வருகை தருகிறார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியி ன் சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர்.

 

இதனால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.இவை ஒரு புறமிருக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திடீரென நீக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி அரசியலில் அடுக்கடுக்கான திருப்பங்கள் அரங்கேறி வரும் பரபரப்பான சூழலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று அம் மாநிலத்திற்கு வருகை தருகிறார்.

 

விமானம் மூலம் 10:30 மணிக்கு லாஸ்பேட்டை விமான தளத்திற்கு வரும் ராகுல் முத்தியால்பேட்டை சோலை நகரில் மீனவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். பின் மைதானத்தில் நடைபெறும் பரப்புரை கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார்.

 

ராகுல் வருகை காரணமாக காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனிடையே புதுச்சேரியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா குறித்து நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon