--- --:--:-- --

ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜனுக்கு கூடுதல் பொறுப்பு..!

4

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார். தொடக்கம் முதலே புதுச்சேரி அரசுக்கும் கிரண்பேடிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் அவரை மாற்ற வேண்டும் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

 

கடந்த வாரம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த அவர் கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விடுவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

புதிய துணை நிலை ஆளுநர் நியமிக்கப்படும் வரை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியின் கூடுதலாக கவனிப்பார் எனதெரிவிக்கப்பட்டுள்ளது, இதனிடைய புதுச்சேரியின் 4 எம்எல்ஏக்கள் பதவி விலகி உள்ளதால் ஆட்சிக்கு சிக்கல் மறுத்து வருகிறது.

 

30 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் காங்கிரசுக்கு 14 உறுப்பினர்கள், 3 திமுகவினர், சுயேச்சை ஒருவர் ஆதரவு என கூட்டணியின் பலம் 18 ஆக இருந்துள்ளது.

 

தற்போது அந்த கட்சியின் பெரும்பான்மை குறைந்துவிட்டதால் முதல் அமைச்சர் நாராயணசாமி அமைச்சரவையை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதிலளித்த நாராயணசாமி காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon