பட்டாசு ஆலை வெடி விபத்தில் தாய், தந்தை என இருவரையும் இழந்த 7 ஆம் வகுப்பு மாணவி..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தாய் தந்தை இருவரையும் இழந்த ஏழாம் வகுப்பு மாணவிக்கு அரசு உதவி தர கோரிக்கை எழுந்துள்ளது. சூரங்குடி கிராமத்தை சேர்ந்த கணவன் மனைவியான பாக்யராஜ், செல்வியும் பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
12 வயது அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் நிலையில் தாய் தந்தையை இழந்து உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தார். விருதுநகர் மாவட்ட சங்கம் சார்பில் மாணவிக்கு 11 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






