--- --:--:-- --

தமிழகத்தில் 2வது டோஸ் தடுப்பூசியை போட இன்று தொடக்கம்..!

1

மிழகத்தில் முதல் டோஸ் கொரொனா தடுப்பூசி போட்டவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசியை போட இன்று தொடங்குகின்றன. தமிழகத்தில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி 3 ஆயிரத்து 126 பேர் கொரொனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டனர்.

 

28 நாட்கள் முடிவடைந்த நிலையில் இவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள தடுப்பூசி செலுத்தும் மையத்தில் மருத்துவமனை முதல்வர் இரண்டாவது தடுப்பூசி டோசை எடுத்துக்கொண்டார்.

 

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் 615 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 340 போட்டுள்ளனர்.

 

இந்த சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட இருபதாம் தேதி வரை அவகாசம் உள்ளதால் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon