--- --:--:-- --

கொரொனாவில் இருந்து மீண்ட 117 வயது மூதாட்டி..!

12

லகிலேயே மிகவும் வயதான இரண்டாவது பெண்மணியான பிரான்சின் சிஸ்டர் ஆன்ரா கொரொனா தொற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்து சாதனை படைத்துள்ளார்.

 

1904 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி பிறந்த இவரது இயற்பெயர் லூசி 1944-ல் கத்தோலிக்கத் திருச்சபையில் அருட் சகோதரியாக சேர்ந்த பெண் ஆண்ட்ரா என பெயரை வைத்துக் கொண்டார். 117 வயதான இவருக்கு கடந்த 16ஆம் தேதி கொரொனா உறுதியாகியுள்ளது.

 

தனிமைப்படுத்தப்பட்ட அவர் தற்போது கொரொனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளார். முதுமை காரணமாக கண்பார்வை இல்லை என்றாலும் நாளை அவர் தனது 117 ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார் என அவரை பராமரிப்பவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon