--- --:--:-- --

துறைமுகங்களை தனியார் மயமாக்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு..!

8

மேம்படுத்துதல் என்ற பெயரில் துறைமுகங்களை தனியார் மயமாக்க முயற்சி நடப்பதாக நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பெரும் துறைமுகங்கள் ஆணைய மசோதா மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது.

 

அதில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் வில்சன் அரசு கொண்டு வந்துள்ள மசோதா திமுக நிர்வாகத்தில் தனியார் ஆதிக்கம் செலுத்தத் வழிவகுக்கும் என விமர்சித்துள்ளார். மேலும், இதனால் தனியார் துறை முகங்கள் பேருந்து நிலையங்கள் போல் புற்றீசல் ஆக பெருகும் என்றும் இதன் விளைவாக கடல் சூழலியல் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

திரிணாமுல் காங்கிரஸ் இடதுசாரி கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்த்துனர். எனினும் ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரித்து பேசின.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon