--- --:--:-- --

ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறு ஆய்வறிக்கை இன்னும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவில்லை…!

6

ந்தை ஜெயராஜ் மற்றும் சகோதரர் பென்னிக்ஸ் உயரிழந்து எட்டு மாதங்கள் கடந்த நிலையிலும் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வழங்கப்படவில்லை என நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் ஜெயராஜின் மகள் மனு அளித்துள்ளார்.

 

கடந்த ஜூன் 19-ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சாத்தான்குளத்தை சிறந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தனர்.

 

ஜூன் 24ஆம் தேதி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடல்கள் 3 அரசு மருத்துவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.பிரேத பரிசோதனை முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

 

இந்த பரிசோதனை முடிவுகளின் அறிக்கைகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை என கூறி ஜெயராஜின் மகள் மெர்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் மனு அளித்துள்ளார்.

 

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் குறித்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் விசாரணை வரும் 8ஆம் தேதி நடக்க உள்ளதாகவும் வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு உடற்கூறு ஆய்வு அறிக்கை தேவைப்படுவதாகவும் ஜெயராஜின் மகள் மெர்சி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon