குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது..!
குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. உதவி ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 66 பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி 3ஆம் தேதி குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வுக்கு மொத்தம் 2.5 லட்சம் பேர் விண்ணப்பத்தின் அடிப்படையில் கொரொனா பெருந்தொற்று காலமாக 1.3 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். இந்த நிலையில் முதல்நிலை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டதாக கூறப்பட்டது. முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு வருகிற மே மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு எழுத தகுதி பெற்றோர் வரும் 16ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து தேர்வுக் கட்டணமாக 200 ஐ செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






