--- --:--:-- --

தேர்தல் நியாயமாக நடைபெற இடையூராக இருப்பதாக கூறி அமைச்சர் வீட்டுக்காவலில் சிறை..!

3

ஆந்திரத்தில் ஊராட்சி தேர்தல் நியாயமாக நடைபெற இடையூராக இருப்பதாக கூறி அமைச்சரை வீட்டுக்காவலில் வைக்க மாநில தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திரத்தில் 13,000 ஊராட்சிகளுக்கு பிப்ரவரி 9 முதல் 21 வரை நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

 

சித்தூர், குண்டூர் மாவட்டங்களில் போட்டியின்றி தேர்வான பெயர்களை மறு அறிவிப்பு வரும் வரை அறிவிக்க வேண்டாம் என ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் ரமேஷ்குமார் அறிவுறுத்தினார்.

 

ஆணையரின் அறிவுறுத்தல்களை கண்டுகொள்ள வேண்டாம் என்றும் போட்டியின்றி தேர்வான பெயர்களை அறிவிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி பேசினார்.

 

இதையடுத்து தேர்தல் முடியும்வரை அவரை வீட்டுக் காவலில் வைக்கும்படி மாநில காவல்துறை தலைமை இயக்குநருக்கு தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய அவர் ஊடகங்களை சந்திக்க அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon