--- --:--:-- --

கூலித்தொழிலாளியின் கண்ணைக்கட்டி கடுமையாக தாக்கிய புகாரில் 4 பேர் கைது..!

7

ஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கூலித்தொழிலாளியின் கண்ணைக்கட்டி கடுமையாக தாக்கிய புகாரில் 8 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அம்மாபேட்டை அடுத்த பூண்டி வேதத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ராகுல் என்பவரை சிலர் மரத்தில் பிடித்து வைத்து கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பணத்தை எடுத்ததாக கூறி அதே பகுதியை சேர்ந்த 4 பேர் மரத்தில் பிடித்து வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 

அவர் வலி தாங்காமல் அலறித் துடித்து கீழே விழுந்துள்ளார். அவரது கையையும் காலையும் இருவர் பிடித்துக்கொள்ள மற்றொருவர் கடுமையாக தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் மயங்கிக் கீழே விழுந்த பிறகும் கூலித்தொழிலாளி மீதான தாக்குதல் தொடர்ந்தது.

 

இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார், செய்யாத குற்றத்திற்காக தன்னை அவர்கள் தாக்கியதாக கூறி மனவேதனையில் ராகுல் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இது தொடர்பான புகாரின் விக்னேஸ்வரன், விவேக், பார்த்திபன் உட்பட 8 பேர் மீது கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon