சசிகலாவை அதிமுகவுக்கு வரவேற்று ஒட்டப்படும் போஸ்டர்கள்..!
தமிழகத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக ஆங்காங்கே ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுசிலாவின் விடுதலையை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் அதிமுக தொண்டர்கள் சசிகலாவை வரவேற்று பல மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களில் கழகத்தை காக்க வரும் அம்மாவின் வாரிசு எனவும் அனைவருக்கும் முகவரி தந்த நிரந்தரப் பொதுச்செயலாளர் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
தலைமை கழக நிர்வாகிகள் சசிகலாவை கட்சியில் சேர்க்கப் போவதில்லை என தொடர்ந்து சொல்லி வரும் நிலையில் அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரை வரவேற்று போஸ்டர் ஒட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட பகுதிகளான கொடைக்கானல் நகரம் மற்றும் அதன் ஒன்றியப் பகுதிகளிலும் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பல்வேறு வகையான வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.







