பாப் பாடகி ரிஹானாவை முட்டாள் எனக்கூறிய நடிகை கங்கனா..!
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு உலகப்புகழ் பாப் பாடகி ரிஹானா ஆதரவு தெரிவித்திருப்பது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேரணி வன்முறைக்குப் பிறகு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டம் நடைபெறும் பகுதிகளில் இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு உலகப்புகழ் பாப் பாடகி ரிஹானா ஆதரவு தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டத்தை முடக்குவதற்கான முயற்சி என்ற செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் டாக் செய்துள்ள அவர் நாம் ஏன் இதைப் பற்றி பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
100 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை கொண்டுள்ள ரிஹானாவின் ட்விட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ரிகானாவிற்கு பதில் ட்வீட் செய்துள்ளார்.
அதில் விவசாயிகள் போராட்டத்தை கடுமையாக சாடியுள்ளனர். ரிகானாவை முட்டாள் என்றும் விமர்சித்துள்ளார். கங்கனாவின் இந்த தொடர்பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.







