--- --:--:-- --

இரண்டாவது திருமணம் செய்த பெண் காவலர்..! கணவன் தற்கொலை..!

13

செங்கல்பட்டில் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து ஏமாற்றியதால் மனமுடைந்த பெண் காவலரின் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

செங்கல்பட்டு அடுத்த சோரனூர் கிராமத்தை சேர்ந்த யுவராஜ்ஜும், மறைமலைநகரில் தலைமைக் காவலராகப் பணி புரியும் சங்கீதாவும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

 

இந்த சூழ்நிலையில் சங்கீதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 8 வயதில் ஒரு மகளும் கணவரை பிரிந்து வாழ்வது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த யுவராஜ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

தற்கொலைக்கு மனைவி சங்கீதாவும் அவரது தற்போதைய காதலன் புருஷோத்தமன் மற்றும் சங்கீதா உடன் பணியாற்றும் தோழிகள்தான் காரணம் என யுவராஜ் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

 

இவர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க போவதில்லை என்று கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் காவலர் சங்கீதாவை பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon