86 வயது பாட்டியை பேஸ்புக்கில் காதலித்து திருமணம் செய்த 36 வயது நபர்..!
காதல் கண் கட்டுதே, காதலுக்கு கண் இல்லை என்று பல டயலாக்குகள் நமது தமிழ் சினிமாவில் வந்துள்ளன. இது மாதிரியான டயலாக் சினிமாவிற்கு மட்டுமல்ல நிஜ வாழ்க்கைக்கும் பொருந்தும்.
நிஜ வாழ்க்கையில் யாருக்கு பொருந்துமோ இல்லையோ ஹாரிஸ் குடும்பத்திற்கு நன்றாக பொருந்தும். ஆனால் இவர்களுக்குள் வயதுதான் கொஞ்சம் கூட பொருந்தவில்லை. யூகேவே சேர்ந்த ஹாரிஸ் என்ற 81வது வயதில் பாட்டியும் எகிப்தை சேர்ந்த முகமது என்ற 36 வயது பையனும் பேஸ்புக் மூலம் நல்ல பிரண்டாக இருந்துள்ளனர்.
போகப்போக காதலாக மாறியுள்ளது. இந்த பாட்டியை 2019 நவம்பர் மாதத்தில் அவரது காதலனை பார்ப்பதற்காக எகிப்துக்கு போயுள்ளார். அங்கு போனதும் இரண்டு பேரும் கல்யாணம் முடித்து விட்டு சந்தோஷமாக இருந்துள்ளனர்.







