--- --:--:-- --

குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு..!

12

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த டெல்லி நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் முதற்கட்டமாக வெள்ளிக்கிழமை தொடங்கி பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

 

கொரொனா காரணமாக காலையில் மாநிலங்களவையும், மாலையில் மக்களவையும் கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவருடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் நடைபெறும் குடியரசு தலைவர் உரையை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

 

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றும்போது காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் பங்கேற்க மாட்டார்கள் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

 

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon