லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்க நகைகளை திருடிய ஊழியர்..!
சென்னையில் பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்க நகைகளை காணவில்லை என புகார் எழுந்துள்ளது. தேனாம்பேட்டையில் உள்ள லலிதா ஜூவல்லரி நகை அளவீடு செய்யும் பணியின் போது ஐந்து கிலோ தங்க நகையை குறைந்திருந்தது தெரியவந்தது.
ஜுவல்லரி கிளை மேலாளர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி ஜுவல்லரி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அங்கு பணிபுரிந்த ராஜஸ்தானை சேர்ந்த பிரவீன் குமார் சிங் என்பவர் நகைகளை திருடியது தெரிய வந்துள்ளது.
பாலிஷ் போடும் நகைகளை பீரோவில் வைக்காமல் அதன் அடியில் வைத்துவிட்டு பின்னர் சக பணியாளர்கள் இல்லாத நேரத்தில் அதனை எடுத்துச் சென்றது சிசிடிவியில் பதிவாகியுள்ளது .இதனிடையே அவர் தலைமறைவான நிலையில் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.







