--- --:--:-- --

குழந்தை பிறந்ததை விட நாட்டுக்காக விளையாடி வென்றதே பெருமை..!

21

குழந்தை பிறந்ததை விட நாட்டுக்காக விளையாடி வென்றதை நினைப்பதே பெருமை என தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

சேலம் மாவட்டம் சின்னமப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும், அவர் முதல் விக்கெட் எடுத்தது கனவு போல் இருந்ததாக தெரிவித்தார்.

 

அறிமுக வீரர் என்று பாராமல் அனைத்து வீரர்களுக்கும் உற்சாகம் அளிப்பதாக கூறினார் .கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றார்.

 

கடின உழைப்பு இருந்தால் அந்த உழைப்பு ஒருவரை மேலே கொண்டு செல்லும் என்றும் கூறினார். தங்கள் வீட்டுப் பிள்ளையாக பார்க்கும் அனைத்து தமிழக மக்களுக்கும் நன்றியை செலுத்தினார்.

Leave a Reply

Right Menu Icon