சசிகலாவுக்கு கொரொனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை..!
சசிகலாவுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது நுரையீரலில் தொற்று இருப்பது சிடி ஸ்கேன் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
அவருக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதுடன் ரத்த அழுத்தம் தைராய்டு பாதிப்பு இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆக இருந்த நிலையில் குறைந்தது. 10 நாட்கள் சிகிச்சை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







