--- --:--:-- --

மீனவர்கள் விரித்த வலையில் சிக்கி கொண்ட காட்டு யானை..!

3

மைசூர் வனப்பகுதியில் உள்ள நீர்நிலையில் தண்ணீர் குடிக்க சென்ற காட்டு யானை ஒன்று மீனவர்கள் விரித்த வலையில் சிக்கிக் கொண்டது. 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் யானை மீன் வலையிலிருந்து விடுவிக்கப்பட்டது.

 

யானையின் கால்கள் மீன் வலையில் வசமாக சிக்கிக் கொண்டதாக கிராமவாசிகள் தெரிவித்தனர். படகுகளில் யானையை நெருங்க முயற்சித்தபோது யானை தும்பிக்கையால் நீரை வாரி இறைத்து நெருங்க விடவில்லை. பல மணி நேரம் கழித்து யானையை நெருங்கி அதனை வலையிலிருந்து விடுவிக்க ஆனந்தமாக ஓடையில் நீந்தி சென்றுள்ளது.

Leave a Reply

Right Menu Icon