பள்ளத்தில் தவறி விழுந்த 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..!
திருச்சி விமான நிலையம் அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சக்திவேல் என்பவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டின் அருகில் சுமார் 50 அடி தூரத்தில் காலி மனையில் வேறொருவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டி இருந்தார்.
மழையின் காரணமாக மேலும் பள்ளம் தோண்ட படாமல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த பள்ளத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மழை நீர் நிரம்பி இருந்துள்ளது. அந்த பகுதியில் நேற்று மாலைவிளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்துள்ளார்.
சுமார் 4 அடி ஆழத்தில் மழைநீர் தேங்கி இருந்த குழிக்குள் விழுந்து இறந்துள்ளார். இதனை அறியாத குடும்பத்தினர் அவரை சிறுமியை நீண்ட நேரமாக தேடியுள்ளனர். பின்னர் 4 மணியளவில் பள்ளத்தில் இருந்து அவரை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்து பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.







