இன்று முதல் 3 நாட்களுக்கு மெரினா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது..!
பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரை, கிண்டி பூங்காவில் உள்ள இடங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை இன்று அமலுக்கு வந்துள்ளது. நோய்த்தொற்று பரவலாக முன்னதாக காணும் பொங்கலன்று கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வார விடுமுறை என்பதால் மக்கள் அதிகம் கூட வாய்ப்பு இருப்பதாகக் கூறி காணும் பொங்கல் உடன் இரண்டு நாட்கள் சேர்த்து அதாவது ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகள் உட்பட அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த தடை உத்தரவானது இன்று அமலுக்கு வந்துள்ளது. மேலும் வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கிண்டி தேசிய பூங்காவில் மக்கள் கூட அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.







