மாட்டை முதலில் யார் வாடி வாசலுக்கு கொண்டு செல்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து..!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டை முதலில் யார் வாடி வாசலுக்கு கொண்டு செல்வது என்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கத்தியால் மாறி மாறி தாக்கிக் கொண்ட இருவர் காயமடைந்தனர்.
வாடிவாசலுக்கு பின்புறம் கரடிக்கல் பெருமாள் பட்டியை சேர்ந்த அருண்குமார், தேவேந்திரன் ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் கத்தி கூட்டில் முடிவடைந்தது.
காயமடைந்த இருவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.







